search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுவை முதல் அமைச்சர்"

    மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க உள்ளதாக புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிளஸ்-2 தேர்வு முடிவுகளில் வழக்கம்போல மாணவிகள்தான் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுக்க உள்ளது.

    இதற்காக பள்ளிகளில் பள்ளி நேரம் தவிர பிற நேரங்களிலும் சிறப்பு வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதோடு மாணவர்கள், ஆசிரியர்களிடம் ஒருங்கிணைப்பு ஏற்படுத்த உள்ளோம். ஏற்கனவே பள்ளிகளில் பெற்றோர், ஆசிரியர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவினர் மாணவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்கள். ஏற்கனவே இந்த குழுவின் கண்காணிப்பால் தேர்ச்சி வீதம் உயர்ந்துள்ளது.

    வரும் காலத்திலும் தேர்ச்சி வீதம் உயரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரிடம் கோடை வெயிலின் தாக்கத்தில் விடுமுறை நீட்டிக்கப்படுமா? என்று கேள்வி கேட்டபோது, அதிகாரிகளோடு கலந்து பேசி முடிவெடுப்போம் என தெரிவித்தார்.

    ×